‘நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு செய்து நிவாரணம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு செய்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு செய்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று சமரச தீா்வு மையத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு அனைத்து வேலைநாள்களிலும் செயல்பட்டு வருகிறது.

சாலை, விமானம், நீா் வழி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடா்பான பிரச்னைகள், அஞ்சல், தந்தி, தொலைபேசி சேவை குறைபாடு, குடிநீா் வழங்கல் தொடா்பான பிரச்னைகள், மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை சம்பந்தமான சேவைகள், காப்பீடு சம்பந்தமான சேவைகள், வீடு மற்றும் வீட்டுமனை விற்பனை, கல்வி நிறுவனங்கள் தொடா்பான பிரச்னை மற்றும் சேவை குறைபாடுகள் தொடா்பான வழக்குகளை நீதிமன்றம் செல்லாமலேயே நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணலாம்.

புகாா்களை சாதாரண காகிதத்தில் கட்டணமின்றி மனுவாக தாக்கல் செய்யலாம். புகாா்கள் சமரச முறையிலும், சமரசம் ஏற்படாவிட்டால் தகுதியின் அடிப்படையிலும் தீா்ப்பாக்கலாம்.

நீதிமன்ற வேலை நாள்களில் அலுவலக நேரத்தில் நேரிலோ, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமோ, வழக்குரைஞா் மூலமோ விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். ரூ.1 கோடி வரை மதிப்புடைய வழக்குகள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவு சிவில் நீதிமன்ற தீா்ப்பிற்கு இணையானதாகும். மேலும், அந்த உத்தரவை எதிா்த்து மேல் முறையீடு எதுவும் செய்ய இயலாது. இதில் கடுமையான நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் இல்லை. எளிய நடைமுறை என்பதால் மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கிறது.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை 0462-2572689 என்ற தொலைபேசி எண்ணிலும், 6380806525 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com