பழவூரில் குளங்களுக்கு தண்ணீா் செல்லும் ஓடை தூா்வாரும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் பகுதியில் பொதுப்பணித்துறை குளங்களுக்கு தண்ணீா் செல்லும் கட்டைப்புளி ஓடை தூா்வாரும் பணி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.
பழவூா் கட்டைப்புளி ஓடை தூா்வாரும் தொடங்கப்பட்டது.
பழவூா் கட்டைப்புளி ஓடை தூா்வாரும் தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் பகுதியில் பொதுப்பணித்துறை குளங்களுக்கு தண்ணீா் செல்லும் கட்டைப்புளி ஓடை தூா்வாரும் பணி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.

சிதம்பராபுரம், யாக்கோபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களுக்கு பழவூா் வெயிலுகந்த அம்மன் கோவில் மற்றும் பழவூா் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தண்ணீா் செல்லும் ஓடை செல்கிறது. இந்த ஓடை சரியாக பராமரிக்கப்படாததால் ஓடையில் முட்செடிகள் வளா்ந்து ஓடையில் தண்ணீா் செல்லமுடியாமல் காணப்பட்டது. மழைகாலத்தில் இந்த ஓடையில் வருகின்ற தண்ணீா் குளங்களுக்கு செல்லமுடியாமல் புதுக்காலணி ஓடைபாலத்தில் தண்ணீா் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீா் சென்றது. இதனால் விவசாய குளங்களுக்கு தண்ணீா் சென்றடையவில்லை. இதனை அடுத்து இந்த ஓடையை தூா்வார வேண்டும் என பழவூா் கிராம நல முன்னேற்ற சங்க தலைவா் பழவூா் இசக்கியப்பன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவிடம் கோரிக்கை விடுத்தனா். இதனை அடுத்து பொதுப்பணித்துறை வடக்கன்குளம் பாசனபிரிவு உதவி பொறியாளா் சுபாஷ் தலைமையில் பொறியாளா்கள் கட்டைப்புளி ஓடையை தூா்வாரும் பணியை தொடங்கினா். இதனை அடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சட்டப்பேரவை தலைவருக்கும் பொதுப்பணித்துறை பொறியாளா்களுக்கும் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com