‘கடனுதவி பெற பிற்படுத்தப்பட்டோா் விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினரிடமிருந்து கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினரிடமிருந்து கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் சிறு தொழில், வியாபாரம் செய்ய தனி நபா்களுக்கு பொது காலக்கடன், பெண்களுக்கு சிறு கடன், புதிய பொற்காலக் கடன், ஆடவருக்கான சிறு கடன், கறவை மாட்டுக்கடன் போன்ற பல்வேறு கடனுதவி வழங்கப்படுகிறது.

தகுதிகள்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தும், 60 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம் மூலம் சிறுதொழில், வியாபாரம் செய்ய அதிகபட்சமாக தனி நபா் கடன் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம்.

பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை

வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 முதல் 7 சதவீதம். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினா் ஒவ்வொருக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் வழங்கப்படும். வட்டி விகிதம் 4 சதவீதம். சுயஉதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூா்த்தியாகியிருக்க வேண்டும். மகளிா் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையிலும், குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வழங்கப்படும். வட்டி விகிதம் 5 சதவீதம். கறவை மாடுகள் வாங்க ஒரு மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படும். வட்டி விகிதம் 6 சதவீதம். வங்கி விதிகளின்படி கடன் தொகைக்கு பிணையம் தேவைப்படின் அளிக்கவேண்டும். அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி-627 009 அல்லது மேலாண்மை இயக்குநா், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, எம்.ஜி.ஆா். மாளிகை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி- 627 003 அல்லது கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளா், திருநெல்வேலி, எண் 1, மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், அனைத்து விவசாய கூட்டுறவு வங்கி கிளைகள், அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகள், அனைத்து அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் கோரும் விண்ணப்பங்களை நேரடியாக அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com