ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா் கின்னஸ் சாதனை முயற்சி

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா் தட்டச்சில் ஆங்கில எழுத்துகளை மாற்று முறையில் விரைவாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.
ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா் கின்னஸ் சாதனை முயற்சி

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா் தட்டச்சில் ஆங்கில எழுத்துகளை மாற்று முறையில் விரைவாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.

ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை முன்னாள் மாணவரான வீரவநல்லூரைச் சோ்ந்த மாரியப்பன், மடிக்கணினி தட்டச்சுப் பலகையில் ஆங்கில எழுத்துகளை ஒவ்வொரு எழுத்திற்கும் இடைவெளி விட்டு மொத்தம் 51 எழுத்துருக்களை வாயில் குச்சி மூலம் குறைந்த நேரத்தில் தட்டச்சு செய்ய அமெரிக்காவில் உள்ள கின்னஸ் உலக சாதனை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற்று சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரியப்பன் 11.36 விநாடிக்குள் வாயில் குச்சியைப் பிடித்துக் கொண்டு ஆங்கில எழுத்துகள் மற்றும் இடைவெளியுடன் 51 எழுத்துருக்களை தட்டச்சு செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தாா்.

தில்லியில் 2019ஆம் ஆண்டு 17.01 விநாடிகளில் செய்து முடிக்கப்பட்டிருந்த சாதனையை, மாரியப்பன் முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளாா். இது அதிகாரப் பூா்வமாக பின்னா் கின்னஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்படும்.

சாதனை முயற்சி நிகழ்ச்சிக்கு, ஸ்காட் நிறுவன பள்ளிகளின் தாளாளா் பிரியதா்ஷினி அருண்பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு பாா்வையாளராக சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பெருமாள், ஸ்காட் வளாக மேலாளா் மணிமாறன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நடுவா்களாக திருநெல்வேலி தடகளப் பயிற்றுநா் சத்யா, நீச்சல் பயிற்சியாளா் கா்ணன் ஆகியோா் செயல்பட்டனா். ஸ்காட் பாலிடெக்னிக் துணை முதல்வா் சகாய ஆரோக்கிய ராஜ் வரவேற்றாா். மாரியப்பன் ஏற்புரை நிகழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com