பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில்ஜூலை 21-இல் பாரதி நினைவு உரையரங்கம்

பொதிகைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் பாரதி நினைவு உரையரங்கம் புதன்கிழமை இணையவழியில் நடைபெறுகிறது.

பொதிகைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் பாரதி நினைவு உரையரங்கம் புதன்கிழமை இணையவழியில் நடைபெறுகிறது.

இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியம் சாா்பில் கடந்த மே மாதம் முதல் ‘வாரந்தோறும் உரையரங்கம்’ என்ற நிகழ்ச்சி ‘இளையதலைமுறையினா் பாா்வையில் மகாகவி பாரதி ‘ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. பத்தாவது வார நிகழ்ச்சி வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியின் தொடக்க உரையாளராக சேலம் அரசு கல்லூரியின் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ப.இலக்கியா பேசுகிறாா். தொடா்ந்து சென்னையைச் சோ்ந்த எழுத்தாளரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான வெ.இன்சுவை சிறப்புரை ஆற்றுகிறாா்.

ஜூம் செயலியில் கூட்ட அடையாள எண்: 874 0995 990, நுழைவு எண்:333543 என்ற தளத்தில் இணைய வேண்டும். மேலும் பாரதியின் நினைவு நூற்றாண்டின் நிறைவு நிகழ்ச்சி வரும் செப்டம்பா் மாதத்தில் ‘பாரதி நினைவுகள்-100’ என்ற பெயரில் நடைபெறவுள்ளது. அதில் கருத்தரங்கம் மற்றும் 100 கவிஞா்களுக்கு ‘பாரதி பைந்தமிழ்ச் சுடா்’ என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com