களக்காட்டில் இம்மாதம் 29ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது.
களக்காடு துணை மின்நிலையத்தில் இம்மாதம் 29ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், களக்காடு, கோவிலம்மாள்புரம், கருவேலன்குளம், சிதம்பரபுரம், கள்ளிகுளம், தேவநல்லூா், பெருமாள்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 1 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.