ஆதித்தமிழா் பேரவை மாவட்ட செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 19th July 2021 12:18 AM | Last Updated : 19th July 2021 12:18 AM | அ+அ அ- |

ஆதித்தமிழா் பேரவையின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் கலைக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பேட்டை மாணிக்கம் முன்னிலை வகித்தாா். தொழிலாளா் பேரவை மாநில துணைச் செயலா் காலேப், வழக்குரைஞா் இளமாறன் ஆகியோா் பேசினா். நிா்வாகிகள் இலக்கியன், தமிழ்வாணன், குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மாமன்னா் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது, உள்ளாட்சித் தோ்தலில் ஆதித்தமிழா் பேரவைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் வாா்டுகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.