அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் நெல்லையில் 23இல் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th July 2021 12:18 AM | Last Updated : 19th July 2021 12:18 AM | அ+அ அ- |

மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் இம்மாதம் 23ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்துத் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, தொமுச மாவட்ட அமைப்பாளா் தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் மோகன், ஏஐடியுசி சடையப்பன், ஹெச்.எம்.எஸ். மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியம், ஐஎன்டியூசி மாவட்டச் செயலா் உமாபதிசிவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிப்பது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளா் உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் இம்மாதம் 23ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பயக18அகக: திருநெல்வேலியில் நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.