நெல்லை, தென்காசியில் மேலும் 30 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th July 2021 12:14 AM | Last Updated : 19th July 2021 12:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 47,555ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 46,933ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 424போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,685ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,033ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 477 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 175 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.