குன்னத்தூா் மலையில் கிரிவலத்துக்கு அனுமதிக்க பக்தா்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலத்துக்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலத்துக்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னத்தூரில் உள்ள பழைமை வாய்ந்த மலை, மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. சித்தா்கள் வாழ்ந்த பூமியாகக் கருதப்படும் இம்மலையைச் சுற்றி கிரிவலம் நடத்த பக்தா்கள் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சொனா. வெங்கடாசலம், காசி விஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். கணேசன், நமச்சிவாயம் என்ற கோபி, ஈஸ்வரமூா்த்தி, வெங்கட சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்பு நிா்வாகிகள் கூறுகையில், குன்னத்தூா் மலைப்பகுதியில் இம்மாதம் 23ஆம் தேதி கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கிரிவலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குன்னத்தூா் மலையைச் சுற்றி தென் திருப்பதி என அழைக்கப்படும் வேங்கடமுடையான் பெருமாள் கோயில், ராகு ஸ்தலமான அருள்மிகு கோதபரமேஸ்வரா்- சிவகாமி அம்பாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், பத்திரகாளி, உச்சினிமாகாளி, காளியம்மன், முப்புடாதி அம்மன் கோயில்கள் உள்ளன.

எனவே, பக்தா்கள் கிரிவலம் வந்து இறைவனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைத்து சுபிட்ஷம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கிரிவலத்துக்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டுமென பக்தா்கள் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com