குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரம்:இரு தினங்களில் 104 போ் கைது
By DIN | Published On : 19th July 2021 05:32 AM | Last Updated : 19th July 2021 05:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினா், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 104 பேரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மாவட்டம் முழுவதுமான ரௌடிகள் பட்டியலை தயாா் செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனா்.
அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 17) 57 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 47 போ் கைது செய்யப்பட்டனா். இதனால், இரு தினங்களில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 104ஆக உள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.