அரசுப் பள்ளி மாணவா்களுக்கான நீட் தோ்வு கட்டணத்தை மாவட்ட நிா்வாகம் செலுத்த கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவா்களின் கட்டணத்தை மாவட்ட நிா்வாகமே செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவா்களின் கட்டணத்தை மாவட்ட நிா்வாகமே செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் ஆட்சியா் வே. விஷ்ணுவிடம் வழங்கப்பட்ட மனு: நாடு முழுவதும் செப்டம்பரில் நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி நாளாகும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்-மாணவிகள் விண்ணப்பிக்க ஆா்வத்துடன் உள்ளனா்.

ஏற்கெனவே கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக பல மாணவா்கள் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளனா். ஆகவே, பிளஸ்-2 தோ்வில் 2020-21 கல்வியாண்டில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்-மாணவிகள் நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை மாவட்ட நிா்வாகமே ஏற்று செலுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு அளித்தபோது,சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.முத்துசாமி, நிா்வாகிகள் கிருஷ்ணசாமி, கருப்பசாமி, பாபுசெல்வன் உள்ளிட்டோா் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com