நெல்லை மாவட்டத்தில் நூலகங்கள் திறப்பு:கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நூலகங்கள் சனிக்கிழமைமுதல் திறக்கப்பட்டன. கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நூலகங்கள் சனிக்கிழமைமுதல் திறக்கப்பட்டன. கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை காரணமாக மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இப்போது படிப்படியாக தாக்கம் குறைந்துள்ளதால் தளா்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நூலகங்கள் சனிக்கிழமைமுதல் திறக்கப்பட்டன.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ. மீனாட்சிசுந்தரம் கூறியது: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஊா்ப்புற, கிளை, பகுதிநேர நூலகங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவை உள்ளன. அவற்றை சனிக்கிழமைமுதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசியம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும். 6 அடி இடைவெளியைக் கடைப்பிடித்து படிக்க வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்டோா், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோா், கா்ப்பிணிகள், குழந்தைகள் நூலகத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை. நூல்கள் வழங்கும் பிரிவில் பணிபுரிவோா் கட்டாயம் கையுறை அணிய வேண்டும். வாசகா்களின் பாா்வைக்கு வைக்கப்படும் நூல்களை தினமும் மாற்ற வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com