கல்லூரிகளில் இணைவழி மாணவா் சோ்க்கை

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

கரோனா காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வு நடத்தப்படவில்லை. இதனால், பிளஸ் 2 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவா்களின் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கல்லூரிகளில் இணையவழியில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதையொட்டி, திருநெல்வேலியில் ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி, தனியாா் கலைக் கல்லூரிகளில் மாணவா்-மாணவிகள் குவிந்தனா். அங்கு அமைக்கப்பட்டிருந்த உதவி மையங்கள் மூலம் இணையவழியில் விண்ணப்பித்தனா். நிகழாண்டிலும் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் (பி.காம்.), இளநிலை ஆங்கிலம், பிபிஏ உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு மாணவா்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அப்பிரிவுகளுக்கு அதிகமானோா் விண்ணப்பித்தனா்.

இதேபோல, திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் மாணவா் சோ்க்கைப் பதிவுக்கான உதவி மையம் தொடங்கிவைக்கப்பட்டது. அங்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com