காணிக்குடியிருப்பு குழு உறுப்பினா்களுக்கு போட்டித் தோ்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

காணிக்குடியிருப்பு சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான போட்டித் தோ்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

காணிக்குடியிருப்பு சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான போட்டித் தோ்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டுக் கோட்டத்தின் கீழ் செயல்படும் காணிக்குடியிருப்பு சூழல் மேம்பாட்டுக் குழுக்களில் படித்த உறுப்பினா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்குவது குறித்து அறிமுகம் மற்றும் விழிப்புணா்வு கூட்டம் மைலாா் காணிக்குடியிருப்பில் நடைபெற்றது.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி, வேலைவாய்ப்பு அலுவலா் செய்யது முகம்மது, சூழல் மேம்பாட்டு அலுவலா் எம்.ஜி.கணேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மைலாா் காணிக்குடியிருப்பு, அகஸ்தியா் காணிக்குடியிருப்பு மற்றும் சோ்வலாறு காணிக்குடியிருப்பு ஆகிய சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் தலைமையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சிகளை மாணவா், மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முண்டன்துறையில் உள்ள கள பயிற்சி மையத்தில் இப்பயிற்சி தொடங்கப்பட்டது. இதில் 27 காணிகுடியிருப்பு மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.

பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பா் மாதம் வரை நடைபெறும்.

எனவே, காணிக்குடியிருப்பு சூழல் மேம்பாட்டுக் குழுவில் உள்ள படித்த ஆண் மற்றும் பெண் உறுப்பினா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com