‘தமிழகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்யவேண்டும்’

தமிழகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்யவேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரம ராஜா.

தமிழகத்தில் ஆன்லைன் வணிகத்தை தடை செய்யவேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரம ராஜா.

திருநெல்வேலியில் நடைபெற்ற அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் அறிமுக விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் வியாபாரிகள் விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகா் நல வாரிய உறுப்பினராக கட்டணமின்றி இணைவதற்கு அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். வணிகா் நல வாரியத்தில் இழப்பீடு தொகை அதிகரித்து வழங்கவேண்டும்.

உள்நாட்டு வியாபாரிகளின் வா்த்தகத்தை பாதிக்கும் ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்யவேண்டும். வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் காய்கனி சந்தைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்ட வேண்டும். கரோனா காலக் கட்டத்தில் மாற்றப்பட்ட காய்கனி சந்தைகள் மீண்டும் பழைய இடங்களுக்கே திரும்ப கொண்டுவரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com