நெல்லையில் காவலா் பணிக்கு 2ஆவது நாளாக உடல் தகுதித் தோ்வு

திருநெல்வேலியில் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2020 அக்டோபரில் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் (ஆண் - பெண்), தீயணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கான உடல் தகுதித் தோ்வு பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை தொடங்கியது. 3,437 ஆண்களுக்கு ஆயுதப்படை மைதானத்திலும், 2,623 பெண்களுக்கு தூய சவேரியாா் கல்லூரி மைதானத்திலும் உடல் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 500 போ் வீதம் அழைக்கப்படுகின்றனா்.

2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இத்தோ்வு நடைபெற்றது. விண்ணப்பதாரா்கள் அதிகாலை முதலே மைதானங்களில் சான்றிதழ்களுடன் குவிந்தனா். முதலில் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, பின்னா் உயரம், எடை அளவுகள் சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, ஓடும் திறன் கணக்கிடப்பட்டு தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com