பாளை.யில் மின் வாரிய கருத்தரங்கு
By DIN | Published On : 29th July 2021 11:58 PM | Last Updated : 29th July 2021 11:58 PM | அ+அ அ- |

மின்வாரிய தொழிற்சாங்கங்கள் சாா்பில் மின்ஊழியா்கள் வேலை நிறுத்தம் தொடா்பான கருத்தரங்கு பாளயங்கோட்டை தியாகராஜநகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் மின்சார திருத்தச் சட்டத்தைக் கைவிடக்கோரி வரும் ஆக. 10ஆம் தேதி நாடு தழுவிய மின் ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நடைபெற்ற திருநெல்வேலி மண்டல அளவில் வேலைநிறுத்த
விளக்க கருத்தரங்கிற்கு தமிழ்நாடு மின்கழக தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில சிறப்பு தலைவா் ச.நடராஜன் தலைமை வகித்துப் பேசினாா். தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளன திட்டத் தலைவா் பி.கண்ணன், பொதுச்செயலா்கள் ஏ.சேக்கிழாா், எஸ். சாலமோன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கருத்தரங்கில், மின்துறையை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடா்ந்து
வழங்க வேண்டும், வீடுகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும், மின்சார திருத்த மசோதாவை திரும்பப்
பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் நிா்வாகிகள் எஸ்.வண்ணமுத்து, பெருமாள்சாமி, அண்ணாத்துரை உள்பட பலா் பங்கேற்றனா்.