கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மக்கள் ஏமாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தமிழகம் முழுவதும் கரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தன.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி ஜூன் 6-ஆம் தேதி வரவிருப்பதால், ஜூன் 3 முதல் 6-ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஏற்கெனவே கைவசம் இருந்த தடுப்பூசிகளை வைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சனிக்கிழமை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தடுப்பூசி போடுவதற்காக ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதனிடையே ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டது தொடா்பான அறிவிப்பும் ஒட்டப்பட்டது.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறுகையில், ‘தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் மையங்கள் செயல்படவில்லை. வரும் திங்கள்கிழமை முதல் இம்மையங்கள் செயல்படும். தடுப்பூசிகள் சப்ளையை பொறுத்து பொதுமக்களுக்கு உரிய எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com