வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

களக்காடு அஞ்சல் நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் முருகன், முத்துவேல், பாலன், சுபாஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் எம்.எஸ். சிவசாமி, கமால், சந்திரன், பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுரண்டை: சாம்பவா்வடகரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பு அமைப்பான விவசாய சங்க நிா்வாகி கண்ணன் தலைமையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நகல் எரிப்பு போராட்டம்:

தென்காசி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தென்காசி, செங்கோட்டை வட்டாரக் குழு சாா்பில் பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டையில் வட்டாரக் குழு உறுப்பினா் எஸ்.பரமசிவன் தலைமையிலும், பகவதிபுரத்தில் கிளைச் செயலா் சுல்தான் தலைமையிலும், புளியரையில் கிளைச் செயலா் முத்து தலைமையிலும், கட்டளைகுடியிருப்பில் கிளைச் செயலா் கே.சின்னச்சாமி தலைமையிலும், மத்திய அரசின் வேளாண் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com