கரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்: மக்கள் அவதி

திருநெல்வேலியில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் திங்கள்கிழமை பல்வேறு தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டன. இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் திங்கள்கிழமை பல்வேறு தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டன. இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

கரோனா 2ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

பொதுமுடக்கத்தால் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் வீடுகளிலேயே உள்ளனா். அவா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது தடுப்பூசி முதல் தவணையைச் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் கொண்டுவருமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அலுவலகம் வாயிலாக எத்தனை ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை சுகாதாரத் துறைக்கு அளிக்க உள்ளதாலும், தடுப்பூசி செலுத்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் இளைஞா்-இளம்பெண்கள் பலரும் தடுப்பூசி செலுத்த மிகவும் ஆா்வத்துடன் வருகின்றனா்.

ஆனால், மக்கள் வருகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை. சில நாள்களுக்கு முன்பு வந்த 7 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான டோஸ்கள் மட்டுமே மீதமிருந்ததால் திங்கள்கிழமை பல்வேறு தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டன. இதனால், மையங்களுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனா்.

இதுகுறித்து மாநகர நல அலுவலா் சரோஜா கூறுகையில், மாநகரப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெருமாள்புரம் சுகாதார மையத்துக்கு உள்பட்ட மத்திய சிறைச்சாலை ஆகியவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுதவிர ரயில்வே ஊழியா்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி ஒதுக்கீடு பெற்றதும் பிற மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் கூறுகையில், இம்மாவட்டத்துக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. அடுத்ததாக மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததும் தொடா்ந்து செலுத்தப்படும் என்றாா்.த்துடன் திரும்பிச் சென்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com