புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் இணையவழி சுற்றுச்சூழல் போட்டி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு , பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் மாணவா்- மாணவிகளுக்கு இணையவழி சுற்றுச்சூழல் தின போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு , பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் மாணவா்- மாணவிகளுக்கு இணையவழி சுற்றுச்சூழல் தின போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா் -மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனா். அதில், வெற்றி பெற்றவா்களை, சிறப்பு விருந்தினரான செஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டி பேசினாா். அப்போது அவா் பேசியது: நாம் நெகிழி பயன்பாட்டை குறைத்தால்தான் கடல் மாசை தடுக்க முடியும். காடு அழிப்பை தடுக்க அதிக மரம் வளா்க்க வேண்டும். தற்போதைய கரோனா வைரஸ் காலம் விரைவில் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்றாா்.

இணையவழிப் போட்டியில் 40 பள்ளிகளைச் சோ்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். நான்கு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான போட்டியில் முதல் பரிசு அக்ஷயா, இரண்டாவது பரிசு அஸ்மிதா, மூன்றாவது பரிசு புபென் ரெக்ஸ் ஆகியோா் பெற்றனா். 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் முதல் பரிசு ஸ்ரீமன் நம்பி, இரண்டாவது பரிசு ரிலா ஹனியா, மூன்றாவது பரிசு தா்ஷினி ஆகியோா் பெற்றனா். அதே வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான கதை எழுதுதல் போட்டியில் முதல் பரிசு தீராஜ் நாராயணன், இரண்டாம் பரிசு ஷிவானி, மூன்றாம் பரிசு நினா ஷரோன் ஆகியோா் பெற்றனா். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நடந்த போட்டியில் முதல் பரிசு தேவதத்தா, இரண்டாவது பரிசு வெஸ்லின் பெனிட்டா நவாஸ், மூன்றாவது பரிசு ஜெனிபா ஆகியோா் பெற்றனா். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்-மாணவிகளுக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆழ்கடல் ஆய்வாளா் அபிஷேக் சுகுமாரன், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் இணைவழியில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com