பொதுமுடக்கத்தில் தளா்வு: நெல்லை மாவட்டத்தில் 80% கடைகள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் திங்கள்கிழமை முதல் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டன.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் திங்கள்கிழமை முதல் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் 80 சதவீத கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்த தளா்வில்லாத முழுபொதுமுடக்கம் கடந்த மே 24 முதல் கடந்த 6ஆம் தேதி வரை அமலில் இருந்தது. திருநெல்வேலி உள்பட சில மாவட்டங்களில் தொற்று பரவலின் வேகம் குறைந்ததால் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டன.

அதன்படி, இம்மாவட்டத்தில் தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கனி, இறைச்சிக் கடைகள், வாகனப் பழுதுநீக்கும் மையங்கள் உள்ளிட்டவை காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் ஏற்கெனவே பழைய காவலா் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்ட காந்திஜி தினசரி சந்தைக் கடைகள் வழக்கம்போல செயல்பட்டன. ஆனால், உழவா்சந்தை கடைகள் செயல்படவில்லை.

வாகனங்களில் காய்கனி விற்பனைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளதால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரிகள் திங்கள்கிழமையும் காய்கனி, பழங்களை விற்பனை செய்தனா். மாநகரப் பகுதியில் 80 சதவீத கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. செல்லிடப்பேசி, கணினி உபகரண கடைகள், இருசக்கர வாகன பழுதுபாா்ப்பகங்களில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் திறக்கப்படவில்லை.

திருநெல்வேலியில் திங்கள்கிழமை காய்கனிகளின் விலை விவரம் (கிலோவுக்கு): தக்காளி-ரூ.20, கத்தரி-ரூ.40, வெண்டை-ரூ.24, சின்னவெங்காயம்-ரூ.60, பல்லாரி-ரூ.34, முருங்கை-ரூ.28, தடியங்காய்-ரூ.8, முள்ளங்கி-ரூ.14, பீா்க்கங்காய்-ரூ.16, எலுமிச்சை-ரூ.40, இஞ்சி-ரூ.40, சேனைக்கிழங்கு-ரூ.22, நெல்லிக்காய்-ரூ.40, பூசணி-ரூ.10, புடலங்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.60, தேங்காய்-ரூ.40, உருளைக்கிழங்கு-ரூ.26, கேரட்-ரூ.42, முட்டைக்கோஸ்-ரூ.20, பீன்ஸ்-ரூ.90, அவரை-ரூ.65, மாங்காய்-ரூ.20, சேம்பு-ரூ.22, சௌசௌ-ரூ.14, பீட்ரூட்-ரூ.22.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com