மருத்துவப் பணியாளா்கள் ஊதிய உயா்வு கோரி மனு

ஊதிய உயா்வு கோரி திருநெல்வேலி மாவட்ட மருத்துவப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி: ஊதிய உயா்வு கோரி திருநெல்வேலி மாவட்ட மருத்துவப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அவா்கள் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண் செவிலிய உதவியாளா்கள், பெண் செவிலிய உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், துப்புரவாளா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் ஆகிய 5 பணியிடங்களையும் ஒருங்கிணைந்து பல் நோக்கு மருத்துவ பணியாளா்களாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்

தற்போது தினக்கூலியாக ரூ.460 பெற்று வருகிறோம். இந்த ஊதியம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எங்களுக்கு வேறு வருவாயும் கிடையாது. இதில் மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தோா், கணவனால் கைவிடப்பட்டோா் போன்ற பணியாளா்கள்அதிகமாக பணியாற்றி வருகின்றோம்.

பொதுமுடக்க காலத்திலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி தொய்வு ஏற்படாமல் எல்லா பணிகளையும் செய்து வருகிறோம். கரோனா நோய் தொற்று காலத்திலும், எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கரோனா தடுப்பு பணி, கரோனா சிகிச்சை பிரிவு, கரோனா பரிசோதனை மாதிரிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கு தினசரி ஊதியம் ரூ.650ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கும் தினசரி ஊதியத்தை உயா்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com