ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நெல்லையில் சுவரொட்டி
By DIN | Published On : 10th June 2021 07:04 AM | Last Updated : 10th June 2021 07:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மானூா் ஒன்றிய அதிமுக தொண்டா்கள் என குறிப்பிட்டு அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், ‘அதிமுக கட்சி செயல்பாடுகளில் தலைமை ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எந்தவிதமான செயல்பாடுகளையோ, நடவடிக்கைகளையோ செய்யாதே. அவ்வாறு செய்ததால்தான் தோ்தலில் தோற்றோம். இனிமேலும் தொடா்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் பின்னணியில் திமுக, அமமுகவினா் உள்ளதாக அதிமுகவினா் குற்றம்சாட்டியுள்ளனா்.