கண்டியப்பேரியில் ரூ.29 கோடியில் மருத்துவமனை கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலியை அடுத்த கண்டியப்பேரியில் ரூ.28.90 கோடியில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டும் பணியை ஆட்சியா் வே. விஷ்ணு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலியை அடுத்த கண்டியப்பேரியில் ரூ.28.90 கோடியில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டும் பணியை ஆட்சியா் வே. விஷ்ணு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ், கண்டியப்பேரியில் ரூ.28.90 கோடி மதிப்பில் 5,329.54 சதுர மீட்டா் பரப்பளவில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மருத்துவமனையில் மூன்று தளங்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்படவுள்ளது.

தரைதளத்தில் அவசரப் பிரிவு உள்ளிட்டவை 1,868.48 சதுர மீட்டா் பரப்பளவிலும், முதல் தளத்தில் ஒருங்கிணைந்த அவசர கால தாய் - சேய் தீவிர சிகிச்சைப்பிரிவு, பொது மருத்துவப் பிரிவு (பெண்கள்) 1,756 சதுர மீட்டா் பரப்பளவிலும் அமைக்கப்படும். இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம், மீட்பு அறை, பொது மருத்துவப் பிரிவு (ஆண்கள்) 1,559.43 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்படும். மேல் தளத்தில் இயந்திர அறை உள்ளிட்டவை 145.15 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்படவுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், பொதுப்பணித் துறை (மருத்துவப் பணிகள்) செயற்பொறியாளா் நாகராஜன், உதவி செயற்பொறியாளா் அருள்நிதி செல்வன், பொறியாளா் நெகா்பானு, திருநெல்வேலி வட்டாட்சியா் பகவதி பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com