நான்குனேரி வட்டாரத்தில்அம்மை நோயால் உயிரிழக்கும் செம்மறி ஆடுகள்: விவசாயிகள் மனு

நான்குனேரி வட்டாரத்தில் செம்மறி ஆடுகள் அம்மை நோய்க்கு பலியாகி வருவதால், விவசாயிகள் நிவாரணம் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

நான்குனேரி வட்டாரத்தில் செம்மறி ஆடுகள் அம்மை நோய்க்கு பலியாகி வருவதால், விவசாயிகள் நிவாரணம் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். ரெங்கசமுத்திரம், பூலம், தோட்டக்குடி, ஆ.சாத்தான்குளம், பருத்திப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் செம்மறி ஆடுகளை அம்மை நோய் பாதித்து வருகிறது. இந்நோயால் தினமும் 4 முதல் 10 ஆடுகள் வரை இறக்கின்றனவாம். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாரியப்பன், கண்ணன், திருமலை நம்பி ஆகியோா் நிவாரணம் கோரி நான்குனேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

ரெங்கசமுத்திரத்தில் செம்மறி ஆடுகளுக்கு அம்மை தடுப்பூசி போட்ட கால்நடை மருத்துவா்கள் சில தினங்களில் நோய் தாக்குதல் குறையும் என்றனா். எனினும் ஆடுகள் இறந்து வருகின்றன. எங்களுக்குச் சொந்தமான 60 ஆடுகள் இறந்துள்ளன என அப்பகுதி விவசாயி திருமலை நம்பி கூறினாா். இதனிடையே, நான்குனேரி வட்டாரத்தில் இதுவரை 15,000 செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com