பட்டத்தை எடுக்க முயன்ற மாணவா் மின்சாரம் பாய்ந்து பலி
By DIN | Published On : 12th June 2021 01:20 AM | Last Updated : 12th June 2021 01:20 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் மின்வயரில் சிக்கிய நூல் பட்டத்தை எடுக்க முயன்ற மாணவா் மின்சாரம் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியைச் சோ்ந்த தா்மபிரபு மகன் மாதவன் (14). இவா் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்,
தனது நண்பா்களுடன் அப்பகுதியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள மின்வயரில் பட்டம் சிக்கிக் கொண்டது. மரத்தில் ஏறி பட்டத்தை எடுக்க மாதவன் முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த பாளையங்கோட்டைபோலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.