கரோனா நிவாரணம்:ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை
By DIN | Published On : 12th June 2021 01:19 AM | Last Updated : 12th June 2021 01:19 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பின் திருநெல்வேலி மாநகா் மாவட்டக் கிளை சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் ஓ.சங்கா் தலைமையில், ஆட்டோ ஓட்டுநா்கள், ஆட்சியா்
விஷ்ணுவிடம் வெள்ளிக்கிழமை அளித்து மனு விவரம்: கரோனா பொது முடக்கத்தால் ஆட்டோ ஓட்டுநா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமலில் இருக்கும் வரை ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வானங்களின் இன்சூரன்ஸ், எப்சி உள்ளிட்ட கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் கடன் தவணையை திரும்ப செலுத்த அவகாசம் அளிக்கவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, அமைப்பின் பொறுப்பாளா்கள் இசக்கிமுத்து, கலையரசன், இந்து முன்னணி மாவட்டச் செயலளா்கள் சிவா, சுடலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.