நெல்லை, தென்காசியில் மேலும் 429 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th June 2021 01:21 AM | Last Updated : 12th June 2021 01:21 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 429 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 231 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,227 ஆக அதிகரித்துள்ளது. இதில் 432 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 43, 039 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 381ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,807 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25,171
ஆக அதிகரித்துள்ளது. மேலும் 388 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 22,994ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,758 போ் சிகிச்சையில் உள்ளனா்.