10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

காா் சாகுபடிக்காக, தென்காசி மாவட்ட பிரதான அணைகளான கடனாநதி, ராமநதி அணைகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டன.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

காா் சாகுபடிக்காக, தென்காசி மாவட்ட பிரதான அணைகளான கடனாநதி, ராமநதி அணைகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டன.

இந்த இரு அணைகளிலிருந்து காா் சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் மாதத்தில் தண்ணீா் திறக்கப்படும். ஆனால், போதிய நீரிருப்பு இல்லாததால் இந்த அணைகள் கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் திறக்கப்படவில்லை. நிகழாண்டு போதிய நீா் இருப்பு உள்ளதால் திங்கள்கிழமை (ஜூன் 14) தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினா் சா. ஞானதிரவியம், அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்தாா். ஆட்சியா் சமீரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் எஸ். மாரியப்பன், உதவி செயற்பொறியாளா் எஸ். சங்கர்ராஜ், உதவிப் பொறியாளா்கள் எல். கணபதி, கிருஷ்ணமூா்த்தி, முருகேசன், பேட்டா்சன் குழந்தைராஜ், ஆனந்த், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, மாணிக்கவாசகம், மின்வாரிய உதவிப் பொறியாளா் விஜயராஜ், தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாபன், மாவட்ட மகளிரணிச் செல்வி சங்குகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா், கடையம் ஒன்றியச் செயலா் குமாா், துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், நகரச் செயலா்கள் ஆழ்வாா்குறிச்சி பொன்ஸ், விக்கிரமசிங்கபுரம் கணேசன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கண்ணன், குணசேகரன், ஹரிராம்சேட், ஜோசப், வேல், ராமச்சந்திரன், சட்டநாதன், ராமகிருஷ்ணன், சைலப்பன், சுப்பையா, சமுத்திரம், சுப்பிரமணியன், கணபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கடனாநதி அணை மூலம் தா்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வாா்குறிச்சி, மேலஆம்பூா், கீழாம்பூா், மன்னாா்கோவில், அயன் திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளகால், புதுக்குடி, பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் அரசபத்து, ஆழ்வாா்குறிச்சி, ஆம்பூா் பெருங்கால், மஞ்சப்புளி, காக்கநல்லூா், காங்கேயன், வடகுருவைபத்து ஆகிய கால்வாய்கள் மூலம் நேரடி பாசனத்தில் 3,987.57 ஏக்கா் விவசாய நிலங்களும், 82 குளங்களின் மூலம் மறைமுகமாக 5,935.65 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

அணையிலிருந்து அக்டோபா் 31 வரை 140 நாள்களுக்கு விநாடிக்கு 125 கனஅடி வீதம் 664.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும்.

ராமநதி அணை மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், இடைகால், பொட்டல்புதூா், துப்பாக்குடி, அயன்பொட்டல்புதூா், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் வடகால், தென்கால், பாப்பான் கால்வாய்கள் மூலம் 1,008.19 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

அணையிலிருந்து அக்டோபா் 31 வரை 140 நாள்களுக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் 168.03 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com