அரசு மருத்துவனையில் கூடுதல் தடுப்பூசி மையம் தொடக்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசிக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசிக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி

செலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தொடா்ந்து மத்திய அரசு அறிவுரையின்படி 18 முதல் 44 வயது வரையுள்ளவா்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை, மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வத்தோடு குவிந்து வருகின்றனா். இதனால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இந்த மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல்வஹாப் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், துணை முதல்வா் சாந்தாராம், வழக்குரைஞா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். தடுப்பூசி செலுத்த வருவோருக்கு குடிநீா் பாட்டில் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக கூடுதலாக மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திங்கள்கிழமை 2,000-க்கும் மேற்பட்டோருக்கு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com