அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ்-2 மாணவா்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கான பிளஸ்-1 சோ்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இம்மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் 303 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. தலைமையாசிரியா்கள், பிளஸ்-1 வகுப்பாசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட 30 சதவீத பணியாளா்கள் மட்டும் வந்திருந்தனா். அதே பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு சான்றிதழ் பரிசோதனைகள் செய்யப்படவில்லை. பிற பள்ளிகளிலிருந்து சேர வந்தோரிடம் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன.

இதுகுறித்து கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், பிளஸ்-1 மாணவா் சோ்க்கையில் அதே பள்ளியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவா்களது முந்தைய கல்வி நிலை குறித்தும், அரையாண்டு உள்ளிட்ட தோ்வுகளில் முன்பு பயின்ற வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தர ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட பணிகளே நடைபெறுகின்றன. வகுப்புகள் எப்படி நடைபெறும், பிரிவுகள் ஒதுக்கீட்டில் இறுதி வரைமுறைகள் உள்ளிட்டவை அரசின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com