களக்காடு பகுதியில் தேநீா்க் கடைகள் திறப்பால் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

களக்காடு பகுதியில் திங்கள்கிழமை தேநீா் கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

களக்காடு பகுதியில் திங்கள்கிழமை தேநீா் கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கடந்த வாரம் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. திங்கள்கிழமை முதல் மதுக் கடை, தேநீா் கடைகளைத் திறக்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, களக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தேநீா்க் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில் சுகாதாரஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா்கள் வேலு, சண்முகம் உள்ளிட்டோா் வணிக நிறுவனங்களில் உரிய கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டனா். விதிகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com