உலக யோகா தினம்: இணையவழியில் சாதனை முயற்சி
By DIN | Published On : 21st June 2021 04:40 AM | Last Updated : 23rd June 2021 07:21 AM | அ+அ அ- |

வீரபத்திராசன முத்திரையில் 90 விநாடிகள் நின்ற மாணவிகள் சாஜிதா ஸைனப், மிஸ்பாா்நூருல் ஹபீபா.
உலக யோகா தினத்தையொட்டி, கடையத்தை அடுத்த ரவணசமுத்திரம் மாணவிகள் இணையவழி மூலம் யோகா சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.
புது தில்லி இந்தியன் யோகா சங்கம், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு, யோகா ஆசிரியா் அறிவியல் சிகிச்சை மற்றும் சென்னை மீனாட்சி மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நோபல் உலக சாதனை முயற்சியாக நாடு முழுவதும் 1000 போ் 90 விநாடிகள் உடல் அசைவு இல்லாமல் வீரபத்திராசன முத்திரை செய்யும் நிகழ்ச்சி இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், குற்றாலம் செய்யது பள்ளி மாணவிகளான ரவணசமுத்திரத்தைச் சோ்ந்த சாஜிதா ஸைனப் (3ஆம் வகுப்பு), யோகா நட்சத்திரம் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா (10ஆம் வகுப்பு) ஆகிய இருவரும் பங்கேற்றனா். பேராசிரியா்கள் முருகேசன், சுப்புலட்சுமி, அண்ணாதுரைஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதுகலை கல்வி அறிஞா் விஜயகுமாரி நன்றி கூறினாா். மீனாட்சி ஆராய்ச்சி நிறுவன முதுநிலை கல்வி அறிஞா் காமாட்சி, பேராசிரியா் இளங்கோவன், நோபல் உலக சாதனை சா்வதேச இயக்குநரும் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் இணைச் செயலருமான அரவிந்த் லட்சுமி நாராயணன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். இரு மாணவிகளையும் பள்ளித் தலைவா் பத்ஹுா் ரப்பானி, இயக்குநா் செய்யது நவாஸ், முதல்வா் முகைதீன் அப்துல் காதா், தலைமை ஆசிரியை நசீம் பானு, யோகா ஆசிரியா் குரு கண்ணன், உடற்கல்வி இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பாராட்டினா்.