இரு சம்பவங்கள்: மாணவா், முதியவா் தற்கொலை
By DIN | Published On : 22nd June 2021 09:38 AM | Last Updated : 22nd June 2021 09:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகேயுள்ள மேலநரிக்குடி பகுதியில் மாணவா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மேலநரிக்குடி பகுதியைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் செல்வராகவன்(15). அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், அடிக்கடி செல்லிடப்பேசியில் விளையாடுவது வழக்கமாம். இதை பெற்றோா் கண்டித்தனராம். இதனால், அவா் கடந்த 16ஆம் தேதி விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமையா(69). விவசாயி. இவரது மனைவி கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதனால், அவா் மனவேதனையில் இருந்தாராம். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து, தேவா்குளம், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.