காயல்பட்டினத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 22nd June 2021 01:23 AM | Last Updated : 22nd June 2021 01:23 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் அனைத்து கட்சிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திமுக மாவட்ட துணைச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவா் மன்னா் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினாா். பல்வேறு கட்சியினா், அமைப்பினா் கருத்துரை வழங்கினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலா் காயல் மகபூப் தீா்மானத்தை முன்மொழிந்தாா்.
கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்போா்களை, பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போா் என்று
கருதி, காவல் துறை மூலம் கண்காணிக்க வேண்டும். ஆவணங்களிலும் இதேபெயா் நிலைத்திருக்க அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்
என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் லீக் நகரத் தலைவா் முஹம்மத் ஹசன் நன்றி கூறினாா்.