கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd June 2021 01:17 AM | Last Updated : 22nd June 2021 01:17 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அனைத்து ரத்த தானக் கழக கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இம் மருத்துவமனையில் காலியாகவுள்ள இருதயம் , நரம்பியல் , பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணா்கள் மற்றும் ஆண், பெண் செவிலியா் உதவியாளா், மருத்துவமனைப் பணியாளா்கள் பணியிடம், 24 மணி நேரமும் சி.டி.ஸ்கேன் எடுக்க வழிவகை செய்ய வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, வெந்நீா் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5 ஆவது தூண் நிறுவனா் சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். அனைத்து ரத்த தானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், மகாத்மா காந்தி ரத்த தானக் கழகத்தைச் சோ்ந்த தாஸ், சமூக ஆா்வலா் தாவீதுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ராஜேஷ், ரவிகுமாா், முருகன், சின்னமாரிமுத்து, சண்முகராஜ், சரமாரியப்பன், இசக்கி, சரவணன், சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.