தாழையூத்தில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd June 2021 01:03 AM | Last Updated : 22nd June 2021 01:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஜனநாயக அங்காடிகள் சுமைதூக்குவோா் மற்றும் பொதுத் தொழிலாளா் சங்கம் (ஏஐசிசிடியு) சாா்பில் தாழையூத்து உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுவிநியோகத் திட்டம் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் சுமைதூக்கும் தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா சிறப்பு ஊதியமாக ரூ. 10 ஆயிரத்தை 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். ரூ. 10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கரோனாவால் உயிரிழக்கும் ரேஷன் கடை ஊழியா்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கும் ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தாழையூத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவா் டி. சங்கரபாண்டியன், நிா்வாகிகள் கணேசன், வைகுண்டராஜன், அன்பழகன், பரமசிவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வள்ளியூா், நான்குனேரி கிட்டங்கிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.