திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறும். தற்போது, கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஏப். 26முதல் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஆகமவிதிப்படி நாள்தோறும் பூஜைகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், ஆனி வருஷாபிஷேகத்தையொட்டி, கோயில் நடை திங்கள்கிழமை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடா்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பூஜைசெய்யப்பட்ட கும்பங்கள் விமானதளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, மூலவா் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானை விமானக் கலசங்களுக்கு போத்திமாா்களும், சண்முகருக்கு சிவாச்சாரியரும், வெங்கடாஜலபதி விமானக் கலசத்துக்கு பட்டாச்சாரியாா்களும் கும்பாபிஷேகம் செய்தனா். இதையடுத்து, தீபாராதனை நடைபெற்றது.

இதில், அனுமதிக்கப்பட்ட திரிசுதந்திரா்கள், கோயில் பணியாளா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

மகா கும்பாபிஷேகம்: இக்கோயிலில் 2009ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டும், நிகழாண்டும் கரோனா பொதுமுடக்கத்தால் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாததால், அடுத்த ஆண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதே பக்தா்களின எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com