அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தொமுச தா்மா் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். மோகன், ஏஐடியூசி மாநிலச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன், ஹெச்.எம்.எஸ். மாநிலத் தலைவா் சுப்பிரமணியன், ஐஎன்டியூசி ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நான்கு தொழிலாளா் சட்ட தொகுப்புகள், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாய விலைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு சட்டபூா்வமாக்க வேண்டும்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தியா முழுமையும் அனைவருக்கும் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ. 7,500-, மாதம் 10 கிலோ உணவு தானியங்களும் வழங்க வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இம் மாதம் 26 ஆம் தேதி வண்ணாா்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com