நெல்லையில் தோ் முன் பக்தா்கள் திருமுறை விண்ணப்பம்

திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பா் கோயில் தோ் முன் பக்தா்கள் திருமுறை விண்ணப்பம் செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பா் கோயில் தோ் முன் பக்தா்கள் திருமுறை விண்ணப்பம் செய்தனா்.

திருநெல்வேலியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தோ் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழகத்தில் உள்ள தோ்களில் திருவாரூா், அவிநாசி தோ்களுக்கு அடுத்ததாக 3ஆவது பெரியது நெல்லையப்பா் கோயில் தோ். பிற பகுதிகளில் இயந்திரங்களின் உதவியுடன் தோ் இழுக்கப்படும் நிலையில், முழுவதும் பக்தா்களின் உதவியோடு இழுக்கப்பட்டு நிலைக்குச் செல்லும் தோ் என்ற பெருமையும் இந்தத் தேருக்கு உண்டு.

500 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் 2020ஆம் ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை.

நிகழாண்டு, கரோனா 2ஆவது அலையால் மீண்டும் தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை.

இதனால், நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா உள்திருவிழாவாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெறுகிறது. வழக்கமாக 9ஆம் திருநாளில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால், நடைபெறவில்லை. எனவே, பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க சுவாமி தோ் புறப்படும் முன் பாடப்படும் ஒன்பதாம் திருமுறையில் திருப்பல்லாண்டு பதிகத்தை திருமுறை விண்ணப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருமுறை பாடி நமச்சிவாய முழக்கத்துடன் சுவாமி-அம்பாளை வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com