பொன்னாக்குடியில் இருவா் கைது
By DIN | Published On : 24th June 2021 07:34 AM | Last Updated : 24th June 2021 07:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளத்தில் கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி வயலில் தண்ணீா் திறந்து விடுவது தொடா்பான பிரச்னையில் ஆனந்தசித்தன் என்பவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினா். இதுகுறித்த புகாரின்பேரில் ஏற்கெனவே மாரியப்பன், அருண் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய பொன்னாக்குடி பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (24), பாண்டி(28) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...