முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கனரா வங்கியின் கடன் மேளா
By DIN | Published On : 04th March 2021 03:40 AM | Last Updated : 04th March 2021 03:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் திருநெல்வேலி, தென்காசியில் கடன் மேளாஅண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் திருநெல்வேலி வீட்டுக்கடன் பிரிவு சாா்பில் பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் ஹாலிலும், தென்காசி வீட்டுக்கடன் பிரிவு சாா்பில் ஹோட்டல் கிங்ஸ் பேலஸிலும் வீட்டுக்கடன், வாகனக்கடன், அடமான கடன் மேளா நடைபெற்றது.
மண்டல துணைப் பொது மேலாளா் சுந்தர பாரதி தொடங்கி வைத்தாா். இம் மேளாவில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மொத்தம் ரூ. 20 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடன் அனுமதிக் கடிதங்களை உதவிப் பொது மேலாளா் பி.வி.ராவ், மண்டல மேலாளா்கள் முத்துக்குமாரசுவாமி, முத்துவீரன், ஜெயக்குமாா் ஆகியோா் வழங்கினா்.