முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தோ்தல் பாதுகாப்புப் பணி: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுரை
By DIN | Published On : 04th March 2021 03:35 AM | Last Updated : 04th March 2021 03:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் அனைத்து உள்கோட்ட உதவி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு தோ்தல் பாதுகாப்பு குறித்த அறிவுரைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் பேசியது: வரலாற்றுப் பதிவேடு உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளையும், வெடிபொருள்கள் வைத்துள்ள குடோன்களையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகாதவா்களை, பிடிவாரண்ட் பெற்று கைது செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரதீப், உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் அா்ச்சனா (ஊரகம்), ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரஸ் (நான்குனேரி), பிரான்சிஸ் (அம்பாசமுத்திரம்), உதயசூரியன் (பொறுப்பு- வள்ளியூா்), தோ்தல் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜெயபால் பா்னபாஸ் ஆகியோா் பங்கேற்றனா்.
படவரி: பயக03நட தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன்.