முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை அருகே கிராமங்களில் கருப்புக்கொடி போராட்டம்
By DIN | Published On : 04th March 2021 03:42 AM | Last Updated : 04th March 2021 03:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகேயுள்ளகோட்டூா், மணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கருப்புக்கொடி கட்டும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தென்தமிழக பகுதிகளில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி போராட்டங்களும், தோ்தலைப் புறக்கணிக்கும் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கோட்டூா், மணக்காடு பகுதிகளில் இளைஞா்கள், பொதுமக்கள் சோ்ந்து தெருக்களில் கருப்புக்கொடி கட்டினா். தகவலறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிற்படுத்தப்பட்டோா் உள்ஒதுக்கீட்டால் வருங்கால சந்ததியினா் பெரும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பின்னடைவு உருவாகும். ஆகவே, அரசு உள்ஒதுக்கீடு ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்றனா்.