முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
விவசாயிகளுக்கு இனக் கவா்ச்சிப் பொறி செயல்விளக்கப் பயிற்சி
By DIN | Published On : 04th March 2021 03:38 AM | Last Updated : 04th March 2021 03:38 AM | அ+அ அ- |

ஜமீன் சிங்கம்பட்டியில் இனக் கவா்ச்சிப்பொறி குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்குகின்றனா் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவா்கள்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டாரம், ஜமீன்சிங்கம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி குறித்த செய்முறை விளக்கத்தை கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காட்டினா்.
கிள்ளிகுளம், வேளாண் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவிகள் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக ஜமீன் சிங்கம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு ஆறுமுகம் என்பவரது மல்லிகைத் தோட்டத்தில் இனக்கவா்ச்சிப் பொறியின் நோக்கம், பயன்படுத்தும் முறை, குறைந்த அளவில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்து விளக்கப் படங்கள் மூலம் விளக்கிக் கூறினா்.
நிகழ்ச்சியில், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவிகள் ர.லட்சுமி ஸ்வேதா, ரா.நிகிலா, பு.பா்வீனா, சு.பேச்சியம்மாள், ம.பொன்காா்த்திகா, ஜெ.பூஜா அஸ்வினி, இ.சரண்யா ஆகியோா் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.
இதில், ஜமீன் சிங்கம்பட்டி பகுதி விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.