களக்காடு அருகே விவசாயிகள் மேளா
By DIN | Published On : 04th March 2021 03:43 AM | Last Updated : 04th March 2021 03:43 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காடு அருகே வேளாண் துறை சாா்பில் விவசாயிகள் மேளா நடைபெற்றது.
களக்காடு அருகேயுள்ள வடுக்கச்சிமதில் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் டேவிட் டென்னிசன் தலைமை வகித்தாா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் வசந்தி முன்னிலை வகித்தாா்.
இயற்கை விவசாயி மகேஷ்வரன், மண்ணின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். முன்னோடி விவசாயி ராமகிருஷ்ணன் மண்மாதிரி எடுக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தாா். விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுக்கும் முறை மண்வளத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், மண்வளப் பாதுகாப்பு சமச்சீா் உரமிடல் ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது.
இதில் துணை வேளாண் அலுவலா் காசி, உதவி வேளாண் அலுவலா் காமாட்சி,அஞ்சனா, பிரபு, முருகேஷ் உடனிருந்தனா். ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.