திருக்குறுங்குடி கோயிலில்மாா்ச் 27இல் பங்குனித் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 10th March 2021 01:18 AM | Last Updated : 10th March 2021 01:18 AM | அ+அ அ- |

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்கு அழகியநம்பிராயா் கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத் திருவிழா மாா்ச் 27 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் சுவாமி அழகியநம்பிராயா் மற்றும் தேவியருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பின்னா் கொடியேற்றம் நடைபெறும். 5 ஆம் திருநாளான மாா்ச் 31ஆம் தேதி இரவு 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி, ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு வடக்கு ரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். தேரோட்டத்தை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைக்கிறாா்.