செல்லிடப்பேசி திருட்டு: இளைஞா் கைது
By DIN | Published On : 10th March 2021 01:11 AM | Last Updated : 10th March 2021 01:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் விக்னேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவா், தனது ஊரில் உள்ள சிலருடன் சோ்ந்து, திருநெல்வேலி நகரத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டு வருகிறாராம்.
இவா், செவ்வாய்க்கிழமை தங்கள் கொட்டகையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபா், அங்கிருந்த செல்லிடப்பேசியை திருடிச் செல்ல முயன்றாராம். இதையடுத்து, விக்னேஷ் மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து அந்த நபரை மடக்கி பிடித்து திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் அந்த நபரை பிடித்து விசாரித்ததில், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த கேசவன் (35) என்பதும், அவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.